The holy see pope francis
திருத்தந்தை பிரான்சிசு
திருத்தந்தை பிரான்சிசு சே.ச | |
---|---|
ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | 13 மார்ச் |
முன்னிருந்தவர் | பதினாறாம் பெனடிக்ட் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 13 டிசம்பர் ரமோன் ஹொசே கஸ்தெல்லானோ-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | 27 ஜூன் அந்தோனியோ குவாராசீனோ-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 21 பெப்ரவரி |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஹோர்கே மாரியோ பெர்கோலியோ |
பிறப்பு | 17 திசம்பர் () (அகவை88) புவேனோஸ் ஐரேஸ், அர்ஜென்டீனா |
குடியுரிமை | வத்திக்கான் குடியுரிமையுடைய அர்கெந்தீனர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இல்லம் | வத்திக்கான் நகர் |
குறிக்கோளுரை | எளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்[1] |
கையொப்பம் |
திருத்தந்தை பிரான்சிசு (, ; ஆங்கில மொழி: Francisஇலத்தீன்: Franciscus இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி.
17 டிசம்பர் ) கத்தோலிக்க திருச்சபையின் ஆம்திருத்தந்தை ஆவார். இவர் , மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே.
மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[2] இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.
இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.[3]
ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில்பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.[4] ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன.[5]
இளமைப் பருவம்
[தொகு]வத்திக்கான் இணையதளம் தரும் தகவல்கள்படி, திருத்தந்தை ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் புவேனோஸ் ஐரேஸ் நகரில் இத்தாலியின் வடக்குப் பகுதியில் தூரின் நகர் அமைந்துள்ள பியத்மாந்து பிரதேசத்தின் பகுதியிலிருந்து சென்று குடியேறிய இத்தாலிய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார்.[6][7][8] அவருடைய பெற்றோர் பெயர்கள் மாரியோ ஹோசே பெர்கோலியோ, ரெஜீனா மரியா சிவோரி ஆகும்.
மாரியோ ஹோசே தொடருந்துத் துறையில் அலுவல் பார்த்தார். ரெஜீனா மரியா வீட்டுப்பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிசு தம் இளமையில் அரசு பள்ளியில் கல்விபயின்றார். சுமார் 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக அவர் ஒரு நுரையீரலின் செயல்பாடு இழந்தார்.[9] புவேனோஸ் ஐரேஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10] பின்னர் தம்மைக் கடவுள் இயேசு சபைத் துறவறக் குருவாக அழைப்பதை உணர்ந்த அவர் இயேசு சபையில் இல் புகுமுகத் துறவு நிலையில் சேர்ந்தார்.
இயேசு சபையில் சேர்தல்
[தொகு]பெர்கோலியோ இயேசு சபையில் புகுமுகத் துறவியாகச் சேர்ந்தது , மார்ச்சு 11ஆம் நாள் ஆகும். வில்லா டெவோட்டா நகரில் இயேசு சபைக் குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இலிருந்து மூன்று ஆண்டுகள் சாந்தா ஃபே மற்றும் புவேனோஸ் ஐரேஸ் நகர்க் கல்லூரிகளில் இலக்கியம், உளவியல் ஆகிய பாடங்கள் கற்பித்தார்.
இல் இறையியல் படிப்பை முடித்த அவர் , திசம்பர் 13ஆம் நாள், தமது 33ஆம் வயதில் இயேசு சபையில் குருத்துவப் பட்டம் பெற்றார். அவருக்குக் குருப்பட்டம் அளித்தவர் பேராயர் ரமோன் ஹோசே கஸ்தெல்லானோ என்பவர்.[11]
[12] அவர் கல்விபயின்ற குருத்துவக் கல்லூரியிலேயே புகுமுகத் துறவியர் தலைவராகவும் இறையியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
காலகட்டத்தில் பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் இயேசு சபை மறைத்தளத் தலைவராகப் பணியாற்றினார்.[13] பின்னர் அவர் இலிருந்து வரை புனித மிக்கேல் குருத்துவக் கல்லூரி அதிபராகப் பணிபுரிந்தார்.[11] இல் அவர் செருமனி சென்று, அங்கு பிராங்க்ஃபுர்ட் நகரில் புனித ஜோர்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார்.
ஆயினும் அங்கு அவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்து முடிக்கவில்லை.[14] பின்னர் அர்ஜென்டீனாவுக்குத் திரும்பிவந்து அங்கே கொர்தோபா நகரில் இயேசு சபையினருக்கு ஆன்ம வழிகாட்டியாகவும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்குபவராகவும் பணியாற்றினார்.[15]
ஆயராகப் பதவி ஏற்றல்
[தொகு]இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பெர்கோலியோவை புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார்.
அவருக்கு , சூன் 27ஆம் நாள் ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆயர் பட்டம் வழங்கிய முதன்மைத் தலைவர் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் அந்தோனியோ குவாராசீனோ ஆவார்.
பின்னர் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயர் ஆனார். அதன் பிறகு, , பெப்ருவரி 28ஆம் நாள் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
அதே நேரத்தில் அவர் அர்ஜென்டீனா நாட்டில் வாழ்ந்து தனி அமைப்பு இல்லாத கீழைச் சபைக் கத்தோலிக்கர்களுக்கும் ஆயராக நியமிக்கப்பட்டார்.
கர்தினால் பட்டம் பெறுதல்
[தொகு]திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பேராயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோவை , பெப்ருவரி 21ஆம் நாள் கர்தினால் பதவிக்கு உயர்த்தினார். அப்போது அவருக்குப் புனித இராபர்ட் பெல்லார்மீனோ கோவில் கர்தினால்-குரு என்னும் பதவியும் அளிக்கப்பட்டது.
கர்தினால் என்னும் வகையில் அவர் உரோமை மைய அலுவலகத்தின் பல பேராயங்களில் உறுப்பினராகப் பணிபுரிந்தார். அவை:
- திருவழிபாடு மற்றும் அருட்சாதனங்கள் ஒழுங்குக்கான பேராயத்தின் உறுப்பினர்;
- குருக்கள் பேராயத்தின் உறுப்பினர்;
- துறவற வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வு நிறுவனங்களுக்கான பேராயத்தின் உறுப்பினர்;
- குடும்பங்களுக்கான திருத்தந்தைக் கழகத்தின் உறுப்பினர்;
- இலத்தீன் அமெரிக்காவுக்கான திருத்தந்தை ஆணைக்குழு உறுப்பினர்.
கர்தினால் பெர்கோலியோவின் பணிகளும் பண்புகளும்
[தொகு]கர்தினால் பெர்கோலியோவின் பணிக்காலத்தில் அவரிடம் துலங்கிய நற்பண்புகள் பற்றிப் பலரும் சான்றுபகர்கின்றனர்.
அவர் மிகவும் பணிவான, எளிமையான வாழ்க்கை நடத்தினார். ஏழைகள் மீது பரிவு காட்டுவதும், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக உழைப்பதும் அவருடைய சிறப்புப் பண்புகளாகக் குறிக்கப்படுகின்றன.
இல் நடந்த இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் கர்தினால் பெர்கோலியோ கீழ்வருமாறு பேசினார்:
“ | உலகத்திலேயே மிகுதியான ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்ற ஒரு பிரதேசத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.Pope francis biography tamil nadu He spoke out against global abuses and the misuse of political and economic power, lamenting the disappearances and suspected murders of 43 students in Mexico; the dangers and losses of life caused by immigration; financial mismanagement within the church itself; and sexual abuse. Narrating his memories, the Holy Father addresses crucial moments of his papacy and various important and controversial questions of our present times, including wars plaguing the world, the future of the Church and religion, social policy, migration, the environmental crisis, women, technological developments, and sexuality. His reform included the consolidation of several dicasteries, the establishment of new offices, and efforts to modernize Vatican financial practices. A footnote in that chapter led to uncertainties about the admission of the divorced-and-remarried to Communion. இங்கே பெரிய அளவு வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வறுமை ஒழிப்பு மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளது. உலகின் வளங்கள் இங்கே நீதியின் அடிப்படையில் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இங்கே நிலவுகின்ற சமூகத் தீவினை விண்ணகம் நோக்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த சமூகத் தீவினையானது நம் உடன்பிறப்புகளுள் எண்ணிறந்தோரின் வாழ்க்கையில் முன்னேற்றமோ வளர்ச்சியோ ஏற்படாதவண்ணம் தடுத்துக்கொண்டே இருக்கின்றது.[16] | ” |
கர்தினால் பெர்கோலியோ எளிமையான வாழ்க்கை நடத்தினார்.
பேராயர் என்ற முறையில் அவருக்குப் பெரியதொரு மாளிகை இல்லமாக இருந்தபோதிலும் அவர் ஒரு எளிய, சிறிய கட்டடத்தில் வாழ்ந்தார். தனி ஓட்டுநரைக் கொண்ட சொகுசு தானுந்து தமக்கு அளிக்கப்பட்டபோதும் அது வேண்டாம் என்று கர்தினால் பெர்கோலியோ பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்து மற்றும் பெருநகர் உந்துகளிலே பயணம் செய்தார்.[17] மேலும், சமயலுக்கென்று தனி ஆள் வைக்காமல், அவர் தமக்கு வேண்டிய உணவைத் தாமே சமைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அநீதியான அமைப்புகளை ஒழித்துச் சமூக நீதியை நிலைநாட்டுவதை விடவும் ஒவ்வொருவரும் நீதியான, எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கை நடத்தும்போது அதுவே சமூக நீதிக்கு வழியாகும் என்பது அவருடைய அணுகுமுறையாக இருந்தது.
நோயுற்றோர் மீது பரிவு காட்டல்
[தொகு]கர்தினால் பெர்கோலியோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் எனப்படுகின்ற எச்.ஐ.வி.
நோய்க்குறி, மற்றும் எயிட்சு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் மட்டில் பரிவு காட்டி செயல்பட்டுள்ளார். இல் அவர் இத்தகைய நோயாளர் வதிந்த ஓர் இல்லம் சென்று, அங்கு அவர்களது காலடிகளைக் கழுவி முத்தமிட்டு, அவர்கள் மட்டில் தமக்குள்ள பரிவை வெளிப்படுத்தினார்.[18]
திறந்த அணுகுமுறை
[தொகு]பெர்கோலியோ கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஆம் ஆண்டில் உரோமையில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.
அப்போது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் செப்டம்பர் 11ஆம் நாள் பயங்கரவாத தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து நியூயார்க் பேராயர் கர்தினால் எட்வர் ஈகன் நாடு திரும்பினார். அவரே ஆயர் மன்றத்தில் குறிப்புச் செயலராகப் பணியாற்றும் பொறுப்பை ஏற்றிருந்தார். அவருடைய இடத்தில் கர்தினால் பெர்கோலியோ செயல்பட்டு, திறந்த மனதுள்ள ஒருவராகத் தம்மை எண்பித்தார்.[19]
கர்தினாலாகப் பணி
[தொகு]உரோமையில் இல் நடைபெற்ற ஆயர் மன்றக் கூட்டத்தின்போது கர்தினால் பெர்கோலியோ ஆயர் மன்றத் தொடர்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
, நவம்பர் 8ஆம் நாள் அவர் அர்ஜென்டீனா ஆயர் பேரவைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினர். அதே பணிக்கு அவர் மீண்டும் நவம்பர் 11ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திரிதெந்து வழிபாட்டு முறைப்படி இலத்தீனில் திருப்பலி நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் வெளியிட்டார்.
அவ்வழிமுறைகள் வெளியான இரண்டே நாட்களுக்குள் அவற்றுக்கு ஏற்ப, கர்தினால் பெர்கோலியோ தமது மறைமாவட்டத்தில் அத்திருப்பலி முறை வாரத்துக்கு ஒருமுறை கடைப்பிடிக்கப்பட ஏற்பாடு செய்தார்.[20][21]
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
[தொகு]முதன்மைக் கட்டுரை: திருத்தந்தைத் தேர்தல் அவை
ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அதிர்ச்சியான ஒரு செய்தியை அறிவித்தார்.
அதாவது, தமது முதிர்ந்த வயது காரணமாகவும் உடல்நிலைக் குறைவு காரணமாகவும் , பெப்ருவரி 28ஆம் நாள் தாம் திருத்தந்தைப் பணியைத் துறக்கப்போவதாக அவர் செய்தி வெளியிட்டார். கடந்த சுமார் ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு ஒரு திருத்தந்தை பணியிலிருந்து விலகியதில்லை. மாறாக, திருத்தந்தைப் பதவி வாழ்நாள் முழுவதற்கும் நீடிப்பது என்ற வழக்கம் நிலவியது.
அந்த அதிர்ச்சியான அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
, மார்ச்சு 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடிய கர்தினால்மார் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குகள் அளித்தார்கள். அடுத்த நாள் மார்ச்சு 13, புதன்கிழமையன்று கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23] இவர் பிரான்சிசு என்பதை தனது ஆட்சி பெயராகத் தெரிவு செய்தார்.[24] அதே நாளில் வத்திக்கான் நகரின் துணை செய்தித் தொடர்பாளர் அருள்திரு தாமசு ரோசிக்கா, இப்பெயரை திருத்தந்தை அசிசியின் பிரான்சிசுவின் நினைவாகத் தேர்வு செய்தார் எனக் கூறினார்.[25][26][27] மேலும் அவர் திருத்தந்தையின் பெயர் பிரான்சிசு என்றும் முதலாம் பிரான்சிசு அல்ல எனவும் தெளிவுபடுத்தினார்.
பின்னாட்களில் வேறு ஒருவர் பிரான்சிசு என்னும் பெயரினைத் தேர்வு செய்தால் அப்போது இவர் முதலாம் பிரான்சிசு எனக் குறிக்கப்படுவார் எனவும் கூறினார்.[28]
ஆட்சி முத்திரை
[தொகு]திருத்தந்தை பிரான்சிசுவின் ஆட்சி முத்திரை மார்ச்,18, அன்று வெளியிடப்பட்டது.[1]இயேசு சபையின் சின்னத்தையும், "இரக்கமுற்றுத் தேர்ந்துகொண்டார்" என்ற விருதுவாக்கையும், திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஆட்சி முத்திரையாகப் பயன்படுத்துகிறார்.
அர்கெந்தீனாவில்புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பணியேற்றபோது பயன்படுத்திய ஆட்சி முத்திரையும், குறிக்கோளுரையையும் திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IHS என்ற மூன்று எழுத்துக்களும், அவற்றைச் சுற்றி அமைந்துள்ள கதிர்போன்ற அடையாளங்களும் இயேசு சபையினரின் அதிகாரப்பூர்வமான சின்னம். அதற்குக் கீழ் ஒரு விண்மீனும், இலாமிச்சை (spikenard) மலரும் பொறிக்கப்பட்டுள்ளன.
இவை, அன்னை மரியாவையும், புனித யோசேப்பையும் குறிப்பன.
வரிதண்டும் பணியில் இருந்த புனித மத்தேயுவை அன்புடன் பார்த்து, அவரைத் தன்பின்னே வரும்படி இயேசு அழைத்த நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு, "இரக்கமுற்றுத்துத் தேர்ந்துகொண்டார்" என்ற வார்த்தைகளைத் தன் பேராயர் பணிக்கென திருத்தந்தை தேர்ந்திருந்தார். ம் ஆண்டு புனித மத்தேயு திருநாளன்று, அப்போது 17 வயது நிரம்பியவரான திருத்தந்தை பிரான்சிசு, தன் துறவற அழைப்பை உணர்ந்ததால், அந்த நிகழ்வைக் குறிக்கும் வார்த்தைகளைத் தன் பணிவாழ்வின் விருதுவாக்காக மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், miserando atque eligendo ("இரக்கமுற்றுத் தேர்ந்துகொண்டார்") என்னும் இலத்தீன் சொற்றொடர், இயேசு சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவைத் தம் சீடராகுமாறு அழைத்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது.
“ | இயேசு அங்கிருந்து சென்றபோது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம் 'என்னைப் பின்பற்றி வா' என்றார் (மத்தேயு ) | ” |
இந்த விவிலிய நிகழ்ச்சிபற்றி விரிவுரை எழுதியவர்களுள் ஒருவர் வணக்கத்துக்குரிய பேதா (The Venerable Bede) என்பவர்.
/3 - ஆண்டுக்காலத்தில் வாழ்ந்த இவர் தமது விரிவுரையில், இயேசு மத்தேயுவைச் சுங்கச்சாவடியில் கண்டு அவர்மீது "இரக்கம் கொண்டு" அவரைத் தம் சீடராகத் "தேர்ந்துகொண்டார்" என்னும் கருத்தை எடுத்துச் சொல்லும் போது miserando atque eligendo என்னும் இலத்தீன் தொடரைப் பயன்படுத்துகிறார். அதையே திருத்தந்தை பிரான்சிசு தமது விருதுவாக்காகக் கொண்டுள்ளார்.
இதில் இரக்கம் என்னும் கருத்தும் தேர்ந்தெடுத்தல் (வேறுபாடு காட்டாமல் பரிவோடு ஏற்கும் மனப்பான்மை) என்னும் கருத்தும் அடங்கியுள்ளன.[29][30] தாம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இக்கருத்துகளைத் திருத்தந்தை பிரான்சிசு தமது உரைகள் வழியாகவும் செயல்கள் வழியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார்.
திருத்தந்தை பிரான்சிசின் ஆட்சியின் முதல் நாள்கள்
[தொகு]திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே பிரான்சிசு திருச்சபையின் ஆட்சி அமைப்பிலும் செயல்பாட்டிலும் சிந்தனைப் போக்கிலும் அடிப்படையான சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதற்கான அறிகுறிகளைத் தெரிவித்தார்.
- , மார்ச்சு 13, புதன்:
தேர்தல் அவையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கர்தினால் பெர்கோலியோவுக்கு தேர்தலின் இரண்டாம் நாள் ஐந்தாம் சுற்றில் கிடைத்தது.
உடனேயே கூடியிருந்த கர்தினால்மார் கையொலி எழுப்பித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
கர்தினால்-வாக்காளர்களில் மூத்தவர் என்ற முறையில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா ரே, கர்தினால் பெர்கோலியோவை அணுகி, சட்டமுறைப்படியான தேர்தல் வழி உமக்கு அளிக்கப்படுகின்ற திருத்தந்தைப் பதவியை ஏற்கிறீரா? என்று கேட்டார். அதற்குக் கர்தினால் பெர்கோலியோ ஏற்கிறேன் என்று பதிலிறுத்தார்.
அந்நேரத்திலிருந்து கர்தினால் பெர்கோலியோ "திருத்தந்தை" என்னும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் கர்தினால் ரே, புதிய திருத்தந்தையிடம் என்ன பதவிப்பெயரைத் தெரிந்துள்ளீர்? என்று கேட்டார். அக்கேள்விக்குப் பதில்மொழியாகத் திருத்தந்தை பிரான்சிசு என்று கூறினார்.
பின்னர் திருத்தந்தை பிரான்சிசு சிவப்பு நிறமான தமது கர்தினால் அங்கியைக் களைந்துவிட்டு, திருத்தந்தைக்குரிய வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார்.
அந்த அங்கியின் மேல் திருத்தந்தைக்கே உரிய கருஞ்சிவப்பு நிறத்திலான தோள்சுற்றாடை (mozzetta) அணிந்து, அதன்மேல் தங்கக் கழுத்துச் சிலுவை அணியும்படி திருத்தந்தை வழிபாட்டுமுறைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த ஆடம்பரம் தமக்கு வேண்டாம் என்று கூறி, தாம் ஆயரான நாளிலிருந்தே அணிந்துவந்துள்ள இரும்பிலான கழுத்துச் சிலுவையை போதும் என்றும், தோள்சுற்றாடை வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
அதன்பிறகு, அவர் கர்தினால்-வேட்பாளர்கள் கூடியிருந்த சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மீண்டும் சென்று, அங்கு கர்தினால்மார் அளித்த மரியாதையைப் பெற்றுக்கொண்டார். அங்கு வழக்கமாகப் புதிய திருத்தந்தைக்கென்று ஓர் உயர்ந்த மேடையில் இடப்பட்ட அரியணை இருக்கும் அதில் புதிய திருத்தந்தை அமர்ந்திருக்க, ஒவ்வொரு கர்தினாலும் அவர்முன் வந்து, முழந்தாட்படியிட்டு அவருடைய கை மோதிரத்தை முத்திசெய்தி தம் மரியாதையையும் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்துவர்.
ஆனால், இங்கேயும் திருத்தந்தை தாம் எளிய முறையைக் கடைப்பிடிப்பதாகக் காட்டினார். அவர் தமக்கென்று போடப்பட்ட அரியணையில் அமராமல், பிற கர்தினால்மார்களைப் போலவே நின்றுகொண்டு அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்னும் பெயருடைய அவர் பிரான்சிசு என்னும் பெயரைத் தெரிந்துகொண்டுள்ளார் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தை மக்கள் முன் தோன்றி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
மக்களுக்கு உரையாற்றியபோது திருத்தந்தை மக்களிடம் தமக்காக இறைவனிடம் அமைதியாக மன்றாடக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு கூறிய பின் சிறிது நேரம் மக்கள் முன்னிலையில் தலைதாழ்த்தி நின்றார். பின்னர் குருத்துவ அடையாளமான தோள்தொங்கல் பட்டையை அணிந்துகொண்டு மக்களுக்கு ஆசி வழங்கினார். ஆசி வழங்கியதும் அந்தப் பட்டையைக் கழற்றிக்கொடுத்துவிட்டார்.
இவ்வாறு மக்களோடு ஒருவராகத் தம்மை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தாம் பணியாளனாக இருப்பதைத் திருத்தந்தை செய்கைகள் வழியாக வெளிப்படுத்தினார்.
திருத்தந்தையின் எளிமையையும் பணிவையும் மக்கள் கண்டு வியந்தது மட்டுமல்ல, புதிய திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையில் எளிமை, கனிவு, பணிவு போன்ற பண்புகள் வளர்வதற்குத் தம் பணிக்காலத்தை அர்ப்பணிப்பார் என்று பொருள்கொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிசுவின் தலைமைப்பணி ஏற்புத் திருப்பலி
[தொகு], மார்ச்சு 19ஆம் நாள், தூய யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தையின் தலைமைப்பணி ஏற்புத் திருப்பலி தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின்போது திருத்தந்தை பிரான்சிசு உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும், அந்தத் தகுதியின் அடிப்படையில் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் பகிரங்கமாகப் பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
முன்னாட்களில் "முடிசூட்டல் விழா" (coronation) என்று அழைக்கப்பட்ட இந்த விழாவை எளிமையான விதத்தில் கொண்டாடும்படி பிரான்சிசு விரும்பினார். இயேசுவின் முதன்மைத் திருத்தூதரான புனித பேதுருவின் வழிவரும் பணியாளர் என்ற முறையில் இந்தப் பணிப்பொறுப்பை ஏற்பதாகப் பிரான்சிசு முன்வந்தார்.
திருப்பலியில் குறைந்தது , மக்கள் கலந்துகொண்டார்கள் என்று கணிக்கப்படுகிறது.
வெளிநாட்டுத் தலைவர்களும் தூதர்களுமாக நாடுகளிலிருந்து ஆட்சி அதிகாரிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் மையப் பொருள் தூய யோசேப்பு திருக்குடும்பத்தின் பாதுகாவலர், திருச்சபையின் பாதுகாவலர் என்பதாகும். மார்ச் 19ஆம் நாள் தூய யோசேப்பின் பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிசின் பதவியேற்பு திருப்பலி நிகழ்வதால் திருத்தந்தை பாதுகாத்தல் என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு மறையுரை ஆற்றினார்.
இயேசு, மரியா ஆகியோருக்கு புனித யோசேப்பு பாதுகாப்பு அளித்து அவர்களைப் பேணிக் காத்தார். அதுபோலவே அவர் திருச்சபை அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்குகின்றார். மேலும், திருத்தந்தை தம் பணிப்பெயராகத் தேர்ந்து கொண்டுள்ள பிரான்சிசு ஏழைகள் மட்டில் நாம் கரிசனை கொண்டு செயல்பட வேண்டியதின் தேவையை உணர்த்துகிறது.
எனவே "பாதுகாத்தல்" என்பது திருச்சபைக்கும் கிறித்தவர்களுக்கும் முக்கியமான ஒன்று.
ஆனால் "பாதுகாத்தல்" என்னும் கருத்து உலக மக்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை மனத்தில் கொண்டு திருத்தந்தை பிரான்சிசு பின்வருமாறு உரையாற்றினர்:
“ | உலகத்தில் பொருளாதாரத் துறை, அரசியல் துறை, சமூகத் துறை ஆகியவற்றில் பொறுப்பான பதவியில் இருப்போர் அனைவரும் கடவுளின் படைப்புலகு குறித்து அக்கறை கொண்டிருக்க வேண்டும்.
உலகத் தலைவர்கள் சுற்றுச்சூழலையும், குழந்தைகளையும், முதியோர்களையும், துன்பத்தில் உழல்வோரையும் பாதுகாக்கக் கடமை கொண்டுள்ளார்கள். | ” |
இந்தப் பதவியேற்பு விழாத் திருப்பலியும் அதோடு தொடர்புடைய சடங்குகளும் எளிமையான விதத்தில் நடத்தப்பட்டன.
Pope francis family members: He was the first Jesuit and the first Latin American to become pope. That fall, Pope Francis showed himself to be progressive on several scientific issues. Peter's Square, in the Vatican City in Rome, Italy, after his selection by the conclave, Pope Francis stated, "As you know, the duty of the conclave was to appoint a bishop of Rome. Dalai Lama.
வழக்கமாக எல்லா கர்தினால்மார்களும் திருத்தந்தையை அணுகி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். ஆனால், இந்த முறை ஆறு கர்தினால்மார் மட்டுமே கர்தினால் குழு அனைத்தின் சார்பிலும் இவ்வாறு மரியாதை செலுத்தச் சென்றார்கள்.[31]
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் பிரிந்து சென்ற மரபுவழி கீழைத் திருச்சபைக்குத் தலைவராக இருக்கின்ற காண்ஸ்டான்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலொமேயு இந்த விழாவில் கலந்துகொண்டது ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.
இந்த இரு திருச்சபைகளும் இல் பிரிந்தன. அந்த நாளிலிருந்து இன்றுவரை கீழைத் திருச்சபை முதல்வர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதில்லை.[32]
திருப்பலி தொடங்குவதற்கு முன்னால், திருத்தந்தை புனித பேதுரு கோவில் வளாகத்தில் மக்களிடையே சென்று அவர்களை வாழ்த்தினார். இழைமக் கண்ணாடியால் மூடப்பட்ட சிறப்பு உந்தில் நின்றுகொண்டு மக்களிடையே செல்வது முந்திய வழக்கம்.
ஆனால் திருத்தந்தை பிரான்சிசு அந்த மூடிய உந்து தமக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். மக்களோடு நேரடி தொடர்புகொண்டு அவர்களோடு உறவாட விரும்பிய அவர் சிறப்பு உந்தில் நின்றுகொண்டு வளாகத்தில் கூடிய மக்கள் நடுவே சென்றபோது, ஆங்காங்கே இறங்கி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சிறு குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்தபோது அவர்களுடைய உச்சந்தலையில் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
குறிப்பாக, ஊனமுற்ற ஒருவரை ஒருசிலர் உயர்த்திப்பிடித்து அவரை ஆசிர்வதிக்கக் கேட்டபோது, திருத்தந்தை வண்டியிலிருந்து இறங்கிச் சென்று அவரைத் தொட்டு முத்தமிட்டு ஆசி வழங்கினார்.
சமயத் தலைவர்கள் வருகை
[தொகு]திருத்தந்தை பிரான்சிசின் பணியேற்பு விழாவில் கலந்துகொள்ள பல நாடுகளின் தலைவர்களும் தூதர்களும் வந்திருந்தனர்.
நாடுகளிலிருந்து வந்திருந்த ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்த வரிசைகளுக்கு முன்னால் பீடத்தின் அருகில் கர்தினால்மார் தமது வழிபாட்டு உடைகளை அணிந்தவர்களாக அமர்ந்திருந்தனர்.
புனித பேதுரு பெருங்கோவிலின் படிகளுக்குக் கீழ்ப்பகுதியில் கிறித்தவ சபைகள், யூத மதம், இசுலாம், புத்தமதம் ஆகிய சமயங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர்.
கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவித்த சடங்கு
[தொகு]மேடையில் அமர்ந்திருந்த திருத்தந்தை பிரான்சிசுக்குக் கம்பளிக் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்டது. திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் (Habemus Papam) என்று மார்ச்சு 13ஆம் நாள் உலகுக்கு அறிவித்த கர்தினால் ழான்-லூயி தோரான் என்பவர் திருத்தந்தைக்கு அந்தக் கழுத்துப்பட்டையை அணிவித்தார்.
கம்பளி ஆடுகளிலிருந்து பெறப்பட்ட கம்பளியைக் கொண்டு நெய்யப்பட்ட அந்தக் கழுத்துப் பட்டை கிறித்தவ மக்கள் என்னும் "ஆட்டுமந்தையை" கரிசனையோடு மேய்த்து, வழிநடத்தும் தலைவராக, நல்ல ஆயராகத் திருத்தந்தை விளங்க வேண்டும் என்னும் உண்மையை நினைவுபடுத்தும் அடையாளம் ஆகும்.[33]
"மீனவர் கணையாழியை" அணிவித்த சடங்கு
[தொகு]பின்னர் கர்தினால் குழுவின் தலைவரான கர்தினால் ஆஞ்செயோ சொடானோ என்பவர் திருத்தந்தையை அணுகி, அவருடைய வலதுகை மோதிரவிரலில் "மீனவர் கணையாழி" (Fisherman's Ring) என்று அழைக்கப்படும் மோதிரத்தை அணிவித்தார்.
இந்த மோதிரம் திருத்தந்தையின் அதிகாரத்தின் சின்னம் ஆகும். இயேசுவின் முதன்மைச் சீடரான புனித பேதுரு மீனவராக இருந்தார் என்பதால், பேதுருவின் வழித்தோன்றலாகப் பதவியேற்கும் திருத்தந்தையும் அந்த மீனவர் கணையாழியை அணிகின்றார். திருத்தந்தை பிரான்சிசுக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிக் கணையாழி ஆகும். இதை என்றிக்கோ மான்ஃப்ரீனி என்னும் கலைஞர் திருத்தந்தை ஆறாம் பவுலுக்கென்று வடிவமைத்திருந்தார்.
அந்த மோதிரத்தில் புனித பேதுரு கைகளில் திறவுகோல்களைத் தாங்கி நிற்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த மோதிரத்தைத் திருத்தந்தை ஆறாம் பவுல் அணியவில்லை. அவர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைச் சித்தரித்த மோதிரத்தை அணிந்தார். ஆனால் ஆறாம் பவுலுக்கென உருவாக்கப்பட்ட மோதிரத்தின் அச்சு பாதுகாக்கப்பட்டிருந்ததால் அதைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மோதிரத்தைத் தாம் விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிசு கூறியதன்படி அவருக்கு அந்த மோதிரம் அணிவிக்கப்பட்டது.[34]
புனித யோசேப்பு பெருவிழாவின் பொருள்
[தொகு]மார்ச்சு 19ஆம் நாள் திருச்சபை புனித யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது.
அந்த நாளில் தமது பணியேற்பு விழா நடைபெறுவது பொருத்தமே என்று திருத்தந்தை தாம் ஆற்றிய மறையுரையில் சுட்டிக்காட்டினார்.[35] மேலும் புனித யோசேப்பைப் போன்று உலக மக்கள் அனைவரும், குறிப்பாக நாடுகளின் ஆட்சியாளர்கள், மக்களைப் "பாதுகாக்க" வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் சந்தித்தல்
[தொகு], மார்ச்சு 23ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு திருத்தந்தையர்களின் கோடையில்லத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்ற முன்னாள் திருத்தந்தை பெனடிக்டைச் சென்று சந்தித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
வத்திக்கான் நேரம் அளவில் திருத்தந்தை இத்தாலிய உலங்கு வானூர்தியில் ஏறிச்சென்று, 10 நிமிட பயணத்திற்குப் பின் திருத்தந்தையர் கோடையில்லமாகிய காஸ்டல் கண்டோல்ஃபோ வானூர்தித் தளத்தில் இறங்கினார். அங்கு அவரை வரவேற்பதற்காக, ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்ட் நின்றுகொண்டிருந்தார். பிரான்சிசும் பெனடிக்டும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.
பின்னர் சிற்றுந்தில் ஏறி இருவரும் கோடையில்லம் சென்றனர். அங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தில் இறைவேண்டல் செய்ய இருவரும் நுழைந்தனர். திருத்தந்தைக்கென மைய பீடத்தின் நடுவில் இடப்பட்டிருந்த தனிப்பட்ட சிறப்பு வேண்டல் முழந்தாட்பீடத்தில் மன்றாட்டு நிகழ்த்துப்படி பெனடிக்டு திருத்தந்தை பிரான்சிசைக் கேட்டார். ஆனால் பிரான்சிசு வேகமாக நடந்து சென்று, பொதுமக்களுக்கென்று இடப்பட்ட சாதாரண முழந்தாட்பீடத்தில் பெனடிக்டின் அருகே தாமும் முழந்தாட்படியிட்டு வேண்டச் சென்றார்.
அப்போது பெனடிக்டைப் பார்த்து, "நாம் இருவரும் சகோதரர்கள்" என்று கூறினார். இவ்வாறு, பிரான்சிசு செய்தது அர்த்தம் நிறைந்த செயலாகக் கருதப்படுகிறது.
அளவில் திருத்தந்தை பிரான்சிசும் ஒய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் நூலக வரவேற்பு அறையில் சந்தித்து 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எப்பொருள் பற்றி விவாதித்தார்கள் என்பது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உணவறைக்குச் சென்று அங்கு இருவரும் நண்பகல் உணவு அருந்தினர். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு உலங்கு வானூர்தி ஏறி மீண்டும் வத்திக்கான் சென்றடைந்தார்.
பதவியில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் இவ்வாறு சந்தித்தது வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்ச்சி. பல நூற்றாண்டுகளாகவே, திருத்தந்தையின் இறப்புக்குப் பின்னர்தான் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால், அந்த வழக்கத்தைப் பின்பற்றாமல் திருத்தந்தை 16ஆம் பெனடிக்டு , பெப்ருவரி 28ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற திருத்தந்தை புதிதாகப் பதவியேற்ற திருத்தந்தையின் ஆட்சியில் தலையிடுவாரா? அவருக்கு எதிரான அதிகார மையமாக அமைந்துவிடுவாரா? - இத்தகைய கேள்விகள் எழுகின்ற பின்னணியில் இரு திருத்தந்தையரும் சந்தித்தது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.[36][37][38]
திருத்தந்தை பிரான்சிசின் நூல் படைப்புகள் (எசுப்பானிய மொழியில்)
[தொகு]- Meditaciones para religiosos () (துறவிகளுக்கான தியானங்கள்)
- Reflexiones sobre la vida apostólica () (திருத்தூது வாழ்வு பற்றிய சிந்தனைகள்)
- Reflexiones de esperanza () (எதிர்நோக்கு பற்றிய சிந்தனைகள்)
- Diálogos entre Juan Pablo II y Fidel Castro () (திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இடையே உரையாடல்)
- Educar: exigencia y pasión () (கல்வி பயிற்றுவித்தல்: அதன் தேவையும் ஈடுபாடும்)
- Ponerse la patria al hombro () (நாட்டைத் தோளில் எடுத்தல்)
- La nación por construir () (நாட்டைக் கட்டியெழுப்புதல்)
- Corrupción y pecado () (ஊழலும் தீவினையும்)
- Sobre la acusación de sí mismo ()(தற்குற்றம் நாட்டல்)
- El verdadero poder es el servicio () (பணிபுரிவதே உண்மையான அதிகாரம்)
- Mente abierta, corazón creyente () (திறந்த மனதும் நம்புகின்ற இதயமும்)
- Jorge Bergoglio; Abraham Skorka ().
Sobre el cielo y la tierra (in Spanish). Buenos Aires: Editorial Sudamericana. பன்னாட்டுத் தரப்புத்தக எண்.
CS1 maint: unrecognized language (link)[39]
விமர்சனங்கள்
[தொகு]திருத்தந்தை பிரான்சிசு பதவியேற்ற ஒரு சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே அவர் அர்ஜென்டீனாவில் இயேசு சபைத் தலைவராகவும் கத்தோலிக்க திருச்சபையின் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் இருந்த காலத்தில் சமூகம், அரசியல் தொடர்பாக என்னென்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தார் என்பது பற்றிய விமர்சனங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின.
அவ்வாறு வெளியான செய்திகளில் பல அவருடைய செயல்பாடுகளைப் போற்றி உரைத்தன. குறிப்பாக, பெர்கோலியோ ஏழை மக்களுக்கு உதவியது, தம் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடித்தது, புவேனோஸ் ஐரேஸ் மாநகரின் சேரிகளில் வாழ்ந்த மக்களைச் சென்று சந்தித்து அவர்களோடு தோழமை கொண்டாடி, அவர்களுடைய இன்பதுன்பங்களில் கலந்துகொண்டது போன்ற நல்ல விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.
அதே நேரத்தில் அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ஆட்சியாளர்களுள் ஒருவராக இருந்ததாலும், இயேசு சபையில் மாநிலத் தலைவராகச் செயல்பட்டதாலும் அந்த ஆட்சிக் காலத்தில் சமூகப் பிரச்சனைகளை எவ்வாறு அணுகினார், எவ்வாறு அணுகவில்லை, அவருடைய அணுகுமுறையில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன என்பது குறித்தும் கருத்துகள் வெளியாயின.
Pope francis biography tamil However, its conclusion was followed by news that the Pope's financial adviser, Australian Cardinal George Pell, had been convicted of sexually abusing two year-old boys. I know that it is an existential and moral ordeal. Choosing the papal name Francis, he became the first pope in history to use the name of Saint Francis of Assisi, the founder of the Franciscan Order known for his devotion to the poor. Jerry Falwell.எனவே, கத்தோலிக்க திருச்சபையின் இன்றைய உலகளாவிய தலைவராக, பில்லியன் மக்களை வழிநடத்துபவராகத் திருத்தந்தை பிரான்சிசு விளங்குவதால் அவரது செயல்பாடுகள்குறித்த விமரிசனங்களை எடுத்துக் கூறும்போது அவர் செயல்பட்ட காலம், அக்காலத்தின் அரசியல் சமூக பின்னணிகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவது இன்றியமையாதது.
அர்ஜென்டீனாவின் "இழிவான போர்" காலம் ()
[தொகு]அர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி, அவற்றின் விளைவாக எழுந்த வன்முறைகள், அரசு எதிர்ப்பாளர்களைக் கைதுசெய்து, சித்திரவதை செய்து, கொன்றுபோடுகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளன.
அந்த வரலாற்றில் மிக மோசமான ஒரு கால கட்டம் அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலம் (Dirty War) () என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் இன்று திருத்தந்தை பிரான்சிசு என்னும் பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹோர்கே பெர்கோலியோவுக்கு எந்த விதத்திலாவது தொடர்பு இருந்ததா என்பது இன்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்:[40]
- ஹுவான் பெரோன் என்னும் வலதுசாரி இராணுவத்தலைவர் நாட்டுத் தலைவராக ஆட்சிசெய்தார்.
- செப்டம்பர் - இராணுவத்தின் மூன்று பிரிவுகளும் இணைந்து மூன்று நாள் பயங்கரச் சண்டைக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றின. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள்.
பெரோன் பணிதுறந்தார். இறுதியில் எசுப்பானியாவில் தஞ்சம் புகுந்தார். நாட்டின் ஆட்சிச் சட்டம் () மீண்டும் செயல்முறைக்குக் கொண்டுவரப்பட்டது.
- - மீண்டும் இராணுவ ஆட்சி தளபதி ஹுவான் கார்லோஸ் ஓங்கானியா தலைமையில் அமைக்கப்பட்டது.
- - பெரோன் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பயங்கரவாத வன்முறை நாட்டில் கோலோச்சியது.
ஹுவான் பெரோன் எசுப்பானியாவிலிருந்து அர்ஜென்டீனா திரும்பி ஆட்சித் தலைவர் ஆனார்.
- சூலை - ஹுவான் பெரோன் இறப்பு. அவருடைய மூன்றாம் மனைவி இசபெல் பெரோன் பதவி ஏற்றார். வலதுசாரி மற்றும் இடதுசாரி வன்முறை அதிகரித்தது. நூற்றுக்கணக்கானோர் வன்முறைக்குப் பலியாயினர். வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தன. பணவீக்கம் ஓங்கியது.
- - பணவீக்கம் % எல்லைக்கு மேல் சென்றது.
- - தளபதி ஹோர்கே விதேலா என்பவர் தலைமையில் இராணுவக் கூட்டாட்சி (military junta) ஆட்சியைக் கைப்பற்றியது.
இராணுவ ஆட்சியின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
Pope francis biography book The Pope's Agenda. That fall, Pope Francis showed himself to be progressive on several scientific issues. He also suffered a personal loss around that same time after several members of his family were killed in a car accident in Argentina. He then made a joint appearance with State Counsellor Aung San Suu Kyi to deliver a highly anticipated speech in which he called for tolerance, but also avoided using the delicate term "Rohingya" and stopped short of condemning the persecution, drawing criticism from those who wanted to see a more forceful stance.இராணுவ ஆட்சியை எதிர்த்தவர்கள், மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டார்கள். மேலும் பெயரோ முகவரியோ இன்றி "காணாமற்போனவர்கள்" அரசு கொடுமைக்கு ஆளானர்கள். இந்த "அரசு பயங்கரவாதம்" (state terrorism) அர்ஜென்டீனாவின் இழிவான போர் (Dirty War) என்னும் பெயரால் அறியப்படுகிறது.
அத்தகைய அரசு பயங்கரவாதம் வரை நீடித்தது.
- - இராணுவ ஆட்சிக்குத் தளபதி லெயோப்போல்டோ கல்த்தியேரி (General Leopoldo Galtieri) தலைமை ஏற்றார்.
- ஏப்பிரல் - தளபதி கல்த்தியேரி கொடுத்த கட்டளையின்மேல் அர்ஜென்டீனிய படைகள் ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றின. ஐக்கிய இராச்சியம் தனது அயல்நாட்டுக் குடியேற்றப் பிரதேசமாகக் கருதிய அத்தீவுகளை மீட்க படை அனுப்பியது.
போரில் அர்ஜென்தீனியர் இறந்தனர். ஐக்கிய இராச்சியம் தீவுகளை மீண்டும் கைவசம் கொண்டுவந்தது. தளபதி கல்த்தியேரி பதவி இறங்கினார், தளபதி ரேய்னால்டோ பிக்னோனே என்பவர் பதவி ஏற்றார்.
- - இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு அர்ஜென்டீனா குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பியது. ராவுல் அல்ஃபோன்சின் என்பவர் அதிபர் ஆனார். உடனேயே அரசு இழிவான போர் நடந்த கால கட்டத்தில் () இராணுவ ஆட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்களை விசாரிக்கக் கட்டளையிட்டது.
அப்போது ஆட்சியில் பங்கேற்ற இராணுவத் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியது பற்றித் தகவல் சேகரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வழி ஏற்பட்டது. பணவீக்கம் % அளவை மிஞ்சியது.
- - பெரோன் கட்சியைச் சார்ந்த கார்லோஸ் மேனெம் என்பவர் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- - கார்லோஸ் மேனெம் மீண்டும் அதிபரானார்.
- - நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொது வேலைநிறுத்தம்.
- - எசுப்பானியாவில் ஒரு நீதிபதி அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் () அர்ஜென்டீனிய இராணுவ அதிகாரிகள் எசுப்பானிய குடிகளைக் கடத்திச்சென்றதற்கும் அவர்களைக் கொன்றதற்கும் தண்டனைபெற வேண்டும் என்று கூறி அவர்களைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தது.
ஆனால் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அர்ஜென்டீனிய மன்னிப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தது.
- - அர்ஜென்டீனிய நீதிபதிகள் இழிவான போர் காலத்தில் () பெண்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுடைய குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றத்தைச் செய்தவர்களைக் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தனர்.
- - மைய-இடதுசாரிக் கூட்டணி ஃபெர்னாண்டோ தெ லா ரூவா தலைமையில் பதவி ஏற்றது.
- அக்டோபர் - நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியினரான பெரோன் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றார்கள்.
- , திசம்பர் 20 - மோசமாகிப்போன பொருளாதார நிலை காரணமாகக் கலவரங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிபர் ஃபெர்னாண்டோ தெ லா ரூவா பதவி துறந்தார்.
- , சனவரி 1 - பெரோன் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதுவார்தோ துகால்தே தற்காலிகத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மே - நெஸ்டோர் கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
- ஆகத்து - இராணுவ ஆட்சிக்காலத்தில் ஆட்சிப் பங்கேற்ற இராணுவத் தலைவர்களுக்கு மனித உரிமை மீறல் விசாரணையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் இயற்றின.
- சூன் - நாட்டின் உச்ச நீதிமன்றம் இழிவான போர் காலத்தில் () இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் பங்கேற்றதாகக் கருதப்பட்ட இராணுவ ஆட்சியாளர்களை விசாரிப்பதிலிருந்து அளித்த பாதுகாப்பை விலக்கிவிட கட்டளை இட்டது.
- நவம்பர் - அமெரிக்காக்களின் உச்ச மாநாடு அர்ஜென்டீனாவில் நடந்தது.
அமெரிக்க அதிபர் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்க்கு எதிராகவும் சுதந்திர வாணிகத்துக்கு எதிராகவும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
- சனவரி - அனைத்துலக நாணய நிதியத்துக்கு அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்த வேண்டிய பல பில்லியன் டாலர் கடனை அர்ஜென்டீனா செலுத்தியது.
- அக்டோபர் - முன்னாள் அதிபர் தளபதி ஹூவான் பெரோனின் உடலைப் புவேனோஸ் ஐரேஸ் நகரின் வேறொரு பகுதியில் புதைத்த போது வன்முறை நிகழ்ந்தது.
- சனவரி - வலதுசாரி இராணுவக் குழுக்கள் களில் கட்டவிழ்த்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த அப்போது ஆட்சியிலிருந்த இசபெல் பெரோன் கைதுசெய்யப்பட்டார்.
- அக்டோபர் - அர்ஜென்டீனாவின் காவல்துறை ஆன்ம குருவாகச் செயல்பட்ட கிறிஸ்தியான் ஃபோன் வேர்னிச் என்பவர் அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் () கைதிகளைச் சித்திரவதை செய்து, கொன்ற நிகழ்ச்சிகளில் ஒத்துழைத்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
- நாட்டு அதிபர் நெஸ்டோர் கிர்ச்னருக்குப் பின், அவருடைய மனைவி கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- திசம்பர் - கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் நாட்டு அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
- ஏப்ரல்- முன்னாள் அதிபர் இசபெல் பெரோன் தமது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டதால் அவரை அர்ஜென்டீனாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அர்ஜென்டீனா அரசு கேட்டது.
அக்கோரிக்கைக்கு இணங்குவதற்கு எசுப்பானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
- ஆகத்து - முதல் வரை இராணுவ ஆட்சிக்காலத்தில் நடந்த இழிவான போர் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு முன்னாள் தளபதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- சூலை - சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தீனா கிர்ச்னரின் பெரோன் கட்சி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்தது.
- திசம்பர் - தற்போது ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகையின் கீழ் உள்ள ஃபாக்லாந்து தீவுகளும் வேறு பல தீவுகளும் தனது ஆளுகைக்கு உட்பட்டது என்று அர்ஜென்டீனிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
- சூலை - ஓரினத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக நடத்தப்படலாம் என்று அர்ஜென்டீனா சட்டம் இயற்றுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் இவ்வாறு ஓரினத் திருமணங்களை ஏற்கும் ஒரே நாடு அர்ஜென்டீனா தான்.
- அக்டோபர் - முன்னாள் அதிபர் நெஸ்டோர் கிர்ச்னர் இறப்பு. அவர் அதிபர் கிறிஸ்டீனா கிர்ச்னரின் கணவர். நெஸ்டோர் இல் நிகழவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
- திசம்பர் - மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவத் தளபதி-ஆட்சியாளர் ஹோர்கே விதேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
- அக்டோபர் - அர்ஜென்டீனாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து அதிபர் கிறிஸ்டீனா கிர்ச்னர் இரண்டாம் முறை பதவியைக் கைப்பற்றினார்.
அவருக்கு 54% வாக்குகள் கிடைத்தன.
- முன்னள் கடல்படைத் தலைவர்களுள் ஒருவரான ஆல்பிரேடோ ஆஸ்டிஸ் என்பவருக்கும் அவரோடு பாதுகாப்புப் படையினர் வேறு பதினொரு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் () இராணுவ ஆட்சியில் பங்கேற்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற அடிப்படையில் இத்தண்டனை பெற்றார்கள்.
- சூலை - அர்ஜென்டீனாவின் இழிவான போர் காலத்தில் () அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளைத் திருடியதை மேற்பார்வை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவ ஆட்சித் தலைவர் ஹோர்கே விதேலா மற்றும் ரெய்னால்டோ பிக்னோனே என்பவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் வேறு மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
மேலே தரப்பட்டுள்ள வரலாற்றுப் பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு அர்ஜென்டீனா கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்னும் முறையிலும் இயேசு சபைக்கு அந்நாட்டில் தலைவராகச் செயல்பட்டார் என்னும் முறையிலும் மனித உரிமை மீறலில் எத்தகைய பொறுப்பு கொண்டிருந்தார் என்பது ஆய்வுக்கு உரியது.
படையாட்சியாளர்களுடன் பெர்கோலியோவுக்குத் தொடர்பு இருந்ததா என்பது பற்றிய சர்ச்சை
[தொகு]அர்கெந்தீனா மற்றும் குவாத்தமாலாவில் இயங்கும் காணாமல் போனவர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு (HIJOS), பிரான்சிசு பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் திருடப்பட்டதிலும், இரண்டு குருக்கள் படைத்துறையினரிடம் பிடிபட்டு சித்திரவதைப்பட்டபோதும் அவர்களைக் காக்க எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது.[41] இக்குற்றச்சாட்டை அர்கெந்தீனாவின் முதன்மை ஊடகவியாளர்களில் ஒருவரான கொராசியோ வெர்பிற்சுகி (Horacio Verbitsky) தனது நூல் ஒன்றில் முன்வைத்தார்.
அக்குற்றச்சாட்டுக்கு ஆதாரம், கடத்தப்பட்ட குருக்களில் ஒருவர் கூறிய வாக்குமூலம் என்று கொராசியோ பத்து ஆண்டுகளுக்கு முன் கூறினார். சர்வாதிகார ஆட்சியின் போது (அர்ஜென்டீனாவின் இழிந்த போர்) நடந்த காலத்தில் () கத்தோலிக்க சமயக் குருக்கள் மற்றும் நற்பணியாளர்களுக்கு எதிராக அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அப்பின்னணியில் மேற்கூறிய இரு குருக்களையும் பாதுகாக்கவும் அவர்களை உயிரோடு மீட்டுக் கொணரவும் பெர்கோலியோ பெருமுயற்சி செய்தார் என்பதே உண்மை என்றும், அவர்மீது குற்றம் சாட்டுவது தவறு என்றும் பலர் கூறியுள்ளனர்.[42]
மேலும், பெர்கோலியோ மீது சாட்டப்படுகின்ற இக்குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் இவ்விரு குருக்களும் படைத்துறையினரால் விடுவிக்கப்பட்டபின்பு அப்போதைய கர்தினால் பெர்கோலியோவுடன் இணைந்து உழைத்தனர் எனவும், திருப்பலியும் திருவருட்சாதனமும் நிறைவேற்றினர் எனவும் வத்திக்கான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.[43]
இராணுவ ஆட்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட குருக்களில் ஒருவர் இறந்துவிட்டார்.
அங்கேரியில் பிறந்து அர்ஜென்டீனா சென்று பணிபுரிந்தவரும் இப்போது உயிரோடு இருப்பவருமான அருள்திரு பிரான்சு யாலிக்சு (Franz Jalics, S.J.) இவ்விடயம் குறித்து செருமானிய மொழியில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.
Pope francis biography tamil language For this reason too, I have decided, notwithstanding anything to the contrary, to concede to all priests for the Jubilee Year the discretion to absolve of the sin of abortion those who have procured it and who, with contrite heart, seek forgiveness for it. Pope Francis also held Synods of Bishops on the family in and The book is enhanced by remarkable photographs, including private and unpublished material made personally available by Pope Francis himself. More upcoming events:.அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில், தான் கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கும் பெர்கோலியோவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து, தான் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் கூறியது:[44]